தமிழகத்தில் தனியார் ஆம்புலன்சுகளுக்கு கட்டண நிர்ணயம்…

தமிழகத்தில் தனியார் ஆம்புலன்சுகளுக்கு கட்டண நிர்ணயம்!

தமிழகத்தில் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், கொரோனா நோயாளிகளை அழைத்து செல்லும் சேவையில் பணியாற்றும் ஒவ்வொரு வகையான தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் அரசு சார்பில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது , பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து மக்களின் உயிர் காக்கும் பணியில், ஒரு முக்கிய பங்களிப்பை ஆம்புலன்ஸ் சேவைகள் கொடுத்து வருகிறது.

தற்போது இந்த தனியார் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு அரசு புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது.

இதன் படி, கொரோனா நோயாளிகளை அழைத்து செல்லும் சாதாரண ஆம்புலன்ஸ்களுக்கு 10 கிலோ மீட்டர் வரை செல்வதற்கு 1500 ரூபாய் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதே சாதாரண ஆம்புலன்ஸ்களில் 10 கிலோ மீட்டருக்கு மேல் செல்வதற்க்கு மீட்டருக்கு 25 ரூபாய் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அடிப்படை உயிர்காக்கும் மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவைகளில் 10 கிலோமீட்டர் வரை செல்வதற்கு மீட்டருக்கு 2000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

இதே உயிர்காக்கும் மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவைகளில் 10 கிலோமீட்டருக்கு மேல் செல்வதற்கு மீட்டருக்கு 50 ரூபாய் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவைகளில், 10 கிலோமீட்டர் வரை செல்வதற்கு 4000 ரூபாய் கட்டணம் மற்றும் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவைகளில் 10 கிலோமீட்டருக்கு மேல் செல்வதற்கு, மீட்டருக்கு 100 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.