பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு ரூ.15,000 நிதி உதவி!!

பெண் குழந்தைகளின் நலனிற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நலத்திட்டங்களை அறிவித்து உள்ளது. அந்த வகையில் குடும்பத்தில் 1 அல்லது 2 பெண் குழந்தைகள் இருப்பின் அவர்களுக்கு அரசு சார்பில் நிதி உதவி அளிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிதி உதவி:

பெண் குழந்தைகள் பிறப்பதை வீண் செலவு என்றும், அவர்களை தாழ்மையாக நினைக்கும் மனப்பான்மை முன்பு இருந்து வந்தது. இதனால் பெண்களுக்கு எதிராக பல அநீதிகள் செய்யப்பட்டு வந்தது. பெண் சிசுக் கொலை, படிப்புரிமை மறுப்பு, சொத்துரிமை மறுப்பு போன்று பல குற்றங்கள் நடந்து வந்தது. இதனால் மக்களுக்கு பெண் குழந்தைகளின் மதிப்பை பற்றிய அறியாமையை நீக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைளை மேற்கொண்டது.

மேலும், பெண் குழந்தைகளின் நலனிற்காக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்களுக்கு கல்வி மற்றும் அரசு பணி வாய்ப்புகளில் குறிப்பிட்ட சதவீத இடஒதுக்கீடு போன்றவற்றையும், அவர்களுக்கு கல்வி உதவித்தொகையையும் வழங்கி வருகிறது. இந்நிலையில், பெண் குழந்தைகளுக்கு கன்யா சுமங்கலா யோஜனா என்ற திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் படி, பெண்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதாவது ஒரு குடும்பத்தில் உள்ள 1 அல்லது 2 பெண் குழந்தைகள் பிறந்தவுடன் முதல் தவணை ரூ.2,000 மும், தடுப்பூசிக்குப் பிறகு இரண்டாவது தவணையாக ரூ.1,000 மும், முதல் வகுப்பில் சேரும்போது மூன்றாவது தவணையாக 2000 ரூபாயும், ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டால், நான்காவது தவணையாக 2,000 ரூபாயும், 9ஆம் வகுப்பில் சேரும்போது, ஐந்தாவது தவணைக்கு 3,000 ரூபாயும், மீதமுள்ள 5000 ரூபாய் 10-12 ஆம் வகுப்பு தேர்ச்சிக்குப் பிறகு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பில் சேரும் போது அளிக்கப்படும்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!