ரேஷன் அட்டைதாரர்களுக்கு கைரேகை பதிவில் சிக்கல்! முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் கருவியில் கைரேகை பதிவிடுவதில் முதியோர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் முதியவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

பயோமெட்ரிக் முறை:

இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் முறையே தற்போது பயோமெட்ரிக் முறை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து திருப்பூரில் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற கைரேகையை பதிவு செய்வதில் முதியோர் சிரமத்தை எதிர்கொள்வதாக புகார்கள் எழுந்துள்ளது.

இத்தகைய பயோமெட்ரிக் முறையில் இளைஞர்கள், நடுத்தர வயதினருக்கு சிரமம் ஏதும் இல்லை. மேலும் குடும்பத்தில் இளைஞர்கள் பலர் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோராக உள்ளனர். அதனால் வயதான பெற்றோர், தாத்தா, பாட்டி மட்டுமே ரேஷன் கடைக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும் முதியவர்களுக்கு கைரேகை பதிவாகவில்லை என்றும், காத்திருக்கும் படியும் ரேஷன் ஊழியர்கள் கூறுகின்றனர். இது முதியவர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே ரேஷன் கடையிலேயே முகாம் நடத்தி கைரேகை பதிவு செய்ய வேண்டுமென மூத்த குடிமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!