தமிழகத்தில் 2021-2022ம் கல்வி ஆண்டில், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. இதையடுத்து, பிஎஸ்சி(நர்சிங்), செவித்திறன் பேச்சு மற்றும் மொழி நோய்க்குறியியல் பட்டப்படிப்பு, பிபிடி, பிஎஸ்இ ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோ தெரபி டெக்னாலஜி, பிஎஸ்சி கார்டியோ பல்மனரி பர்பியூஷன் டெக்னாலஜி, பிஎஸ்சி மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி, பிஎஸ்சி ரெஸ்பயரேட்டரி தெரபி, பிஓடி, பிஆப்டம், பிஎஸ்சி நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி, பிஎஸ்சி கிளினிக்கல் நியூட்ரிஷியன் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், அந்த படிப்புகளுக்கான நிகழ் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் பதிவு செய்வது இன்று (25ம் தேதி) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நவம்பர் 8ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!