இந்தியா முழுவதும் நாளை முதல் ரயில்கள் ரத்து!!

இந்தியா முழுவதும் நாளை முதல் ரயில்கள் ரத்து:

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், நாளை முதல் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளனர்.

கிழக்கு ரயில்வே அறிவிப்பு:

இந்தியா  முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2.63 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே நிர்வாகம் பயணிகள் அதிகம் செல்லாத ரயில்களை ரத்து செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக கிழக்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.