இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு; நேரடி வகுப்பு கிடையாது!! அண்ணா பல்கலை!

அண்ணா பல்கலை கல்லுாரிகளில், இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, வரும், 1ம் தேதி முதல் 15 நாட்களுக்கு, ஒருங்கிணைப்பு பயிற்சி நிகழ்வுகள், கல்லுாரிகளில் நேரடியாக நடத்தப்படும்.அதன்பின், அந்த மாணவர்கள் அவரவர் வீட்டில் இருந்து, ஆன்லைன் வகுப்பில் மட்டுமே பங்கேற்க வேண்டும். செய்முறைக்கு மட்டும் நேரடியாக அழைக்கப்படுவர்.

ஜனவரியில் இருந்து நேரடி வகுப்புகளுக்கு மாணவர்கள் அழைக்கப்படுவர்.அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், நவ., 8 முதல் ஒருங்கிணைப்பு பயிற்சி நிகழ்வுகள், 15 நாட்கள் நடக்கும். அதன்பின், அந்தந்த கல்லுாரிகள், தங்களின் விடுதி வசதியை பொறுத்து, நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வழியிலோ வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!