தமிழக சட்ட பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தலைமையில் நடப்பு நிதி ஆண்டு(2023-24) பட்ஜெட் கூட்ட தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இதில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
தமிழ் நாடு பட்ஜெட் 2023:
2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாவது இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்பட்டது . இதன் பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு 2-வது பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டது . தற்போது திமுக அரசு தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
காலை 12.04 மணி:
பெண்களுக்கு ரூ. 1,000 உதவி தொகை.
காலை 11.59 மணி:
மக்களுக்கு மானியம் வழங்க ரூ. 5,000 கோடி நிதி ஒதுக்கீடு.
காலை 11.56 மணி:
பெண்களுக்கு உரிமை தொகை ரூ. 1,000 வழங்குவதற்கு மொத்தம் ரூ. 7,000 கோடி நிதி ஒதுக்கீடு.
காலை 11.55 மணி:
கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.4236 கோடி மதிப்புள்ள 4491 ஏக்கர்-கோயில் நிலங்கள் மீட்பு:
காலை 11.55 மணி:
செப்.15 முதல் பெண்களுக்கு ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்:
வரும் நிதி ஆண்டில் பெண்களுக்கு உரிமைத் தொகை மாதம் ரூ. 1,000 வழங்கப்படும்
காலை 11.49 மணி:
பத்திர பதிவு கட்டணம் 4%-ல் இருந்து 2% ஆக குறைப்பு
காலை 11.47 மணி:
சொத்துகளின் வழிகாட்டி மதிப்பை திருத்துவதற்காக குழு அமைக்கப்படும்:
அரசு பணியாளர் வீடு கட்ட முன்பணம் ரூ. 50 லட்சமாக அதிகரிப்பு:
காலை 11.47 மணி:
சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்துக்கு ரூ. 5346 கோடி ஒதுக்கீடு:
காலை 11.44 மணி:
மேலும் 1 லட்சம் பேருக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும்:
1காலை 11.44 மணி:
கோவில்களின் திருப்பணிகள் நிறைவடைந்துள்ளன:
காலை 11.41 மணி:
நத்தம் நிலங்களுக்கு விரைவில் இணையவழி பட்டா மாறுதல் முறை
கண்ணாடி இழை தொடர்புக்கு ரூ. 400 கோடி நிதி ஒதுக்கீடு:
காலை 11.40 மணி:
விருதுநகர் உள்ளிட்ட 4 நகரங்களில் ரூ. 410 கோடியில் சிப்காட் தொழிற்பூங்கா
காலை 11.40 மணி:
தகவல் தொழில்நுட்ப புரட்சியின் இரண்டாம் கட்டமாக சென்னை, கோவை, ஓசூர் TNTECH CITY அமைக்கப்படும்.
காலை 11.39 மணி:
நாகூர் தர்காவை மேம்படுத்த ரூ2 கோடி நிதி ஒதுக்கீடு.
காலை 11.39 மணி:
சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை WiFi வசதி செய்து தரப்படும்.
காலை 11.35 மணி:
தொழில்துறைக்கு ரூ. 3268 கோடி நிதி ஒதுக்கீடு.
காலை 11.34 மணி:
சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை WiFi வசதி செய்து தரப்படும்.
காலை 11.30 மணி:
1000 புதிய பேருந்துகள், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு.
காலை 11.29 மணி:
பசுமை மின்வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்.
காலை 11.28 மணி:
ரூ. 100 கோடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.
காலை 11.28 மணி:
சென்னை கோடம்பாக்கம்- பூவிருந்தவல்லி மெட்ரோ ரயில் திட்டம் 2025-ல் நிறைவு.
காலை 11.28 மணி:
சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் நகர்ப்புற பொதுச்சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம் ஆகிய நவீன வசதிகள் அமைத்திட ரூ.50 கோடி ஒதுக்கீடு.
காலை 11.24 மணி:
ரூ. 880 கோடியில் சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.
காலை 11.24 மணி:
ரூ. 77,000 கோடியில் புதிய மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும்:
காலை 11.21 மணி:
மகளிர் இலவச பயணத்துக்காக ரூ. 2800 கோடி நிதி ஒதுக்கீடு.
காலை 11.20 மணி:
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரூ.7145 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
காலை 11.19 மணி:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கீடு
ரூ. 8,500 கோடியில் மதுரையில் மெட்ரோ ரயில் சாலை திட்டம் செயல்படுத்தப்படும்
காலை 11.15 மணி:
ரூ. 9,000 கோடியில் கோவையில் மெட்ரோ ரயில் சாலை திட்டம் செயல்படுத்தப்படும்.
காலை 11.14 மணி:
ரூ. 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
காலை 11.13 மணி:
621 கோடியில் சென்னை அண்ணாசாலையில் 4 வழி மேம்பாலம்: தமிழ்நாடு பட்ஜெட்
காலை 11.11 மணி:
ரூ. 1,000 கோடியில் வட சென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்: தமிழ்நாடு பட்ஜெட்
காலை 11.11 மணி:
சென்னை தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை இடையே 4 வழி மேம்பாலம் கட்டப்படும்.
காலை 11.11 மணி:
ரூ. 320 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
காலை 11.11 மணி:
எழில்மிகு கோவை, மாமதுரை திட்டங்கள் மூலம் 2 நகரங்கள் மேம்படுத்தப்படும்.
காலை 11.08 மணி:
ரூ. 800 கோடியில் 10,000 குளங்கள் புதுப்பிக்கப்படும்.
காலை 11.02மணி:
ரூ. 43 கோடியில் கோவையில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும்.
காலை 11.00 மணி:
5140 கிமீ சாலைகளை மேம்படுத்த ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு.
கட்டிட வரைபடங்களுக்கான அனுமதியை இணையம் மூலம் பெறுவதற்கு நடவடிக்கை.
காலை 10.59 மணி:
ரூ. 25 கோடியில் மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் சரணாலயம்
மதுரை கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் ஜூனில் திறப்பு.