மக்களே ரேஷன் கார்டு தொலைத்துவிட்டதா திரும்ப பெற வழிமுறைகள் இதோ!

ரேஷன் கார்டுகள்:

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ரேஷன் கடைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை ஆகியவற்றை மலிவு விலையில் வழங்குகின்றன. அரசின் பல நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களிடம் சென்றடைகின்றன. மேலும் தமிழக மக்களுக்கு தேவையான முக்கிய ஆவணங்களில் ரேஷன் கார்டுகள் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களும் சரியான முறையில் தகுதி உடையவர்களுக்கு சென்றடைய ரேஷன் கடைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் தகுதி உடையவர்களுக்கு ரேஷன் பொருள்கள் சரியான முறையில் தரமாக வழங்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. அத்தகைய முக்கிய ஆவணமான ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால் சலுகைகள் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். அதனை சரி செய்யும் பொருட்டு ரேஷன் கார்டை அரசு அலுவலகங்களுக்கு சென்று அலையாமல் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வலைத்தளத்திற்கு சென்று கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி எளிதாக ரேஷன் கார்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.

ஆன்லைன் மூலம் பதிவிறக்கம்:

 • தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கமான https://www.tnpds.gov.in/ பக்கத்தை திறந்து கொள்ள வேண்டும்.
 • அதில், பயனாளர் நுழைவு என்னும் டேப்பை கிளிக் செய்ய வேண்டும்.
 • அதன் உள் சென்றதும் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.
 • அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி உள்ளிட வேண்டும்.
 • தற்போது ரேஷன் கார்டை பதிவிறக்கம் செய்யும் டேப் வரும். அதன் உள்ளே சென்று ‘ ஸ்மார்ட் கார்டு பிரிண்ட்’ என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
 • பின் உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்ய வேண்டும்.
 • பின்னர் சேவ் என கொடுத்தால் பிடிஎஃப் வடிவதில் உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டை பதவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஆப்லைன் மூலமாக பெற:

 • முதலில் மாவட்ட உணவு மற்றும் விநியோகக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும்
 • இதையடுத்து குடும்ப உறுப்பினர்களின் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
 • அதில் ரேஷன் கார்டு எண், அனைத்து உறுப்பினர்களின் ஆதார் கார்டை, குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் அடையாளச் சான்று போன்ற ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டும்.
 • இறுதியாக நகல் ரேஷன் கார்டு பெறுவதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்த பின் அத்துடன் அபராதக் கட்டணத்தின் இரண்டு ரசீதுகளையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!