சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு இலவச அனுமதி!!

சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு இலவச அனுமதி:

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பல சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் ஒவ்வொரு வாகனங்களுக்கும் குறிப்பிட்ட அளவு தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்துவதற்காக வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்து கிடக்கக்கூடிய சூழல் ஏற்படுகிறது.

இதனால் அனைத்து வாகனங்களும் பாஸ்டேக் முறையை பயன்படுத்தும்படிக்கு மத்திய அரசு வலியுறுத்தி, அவை நடைமுறையிலும் உள்ளது. இருந்தாலும் சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தற்போது வரை நீடித்துள்ளது. இதன் காரணமாக மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுக்கு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு சுங்கச் சாவடியின் இரு வழிகளிலும், 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் நிறத்தில் ஒரு கோடு போடப்பட்டிருக்க வேண்டும். இப்போது சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த வரும் வாகனங்கள், மஞ்சள் நிற கோட்டை தாண்டி நீண்ட வரிசையில் காத்திருந்தால் அந்த வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதி கொடுக்க வேண்டும். இவ்வாறு மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.