அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி இன்று முதல் தொடக்கம்!!

தென்காசி அருகே கீழப்புலியூர் வீரமாமுனிவர் ஆர்.சி. மேல்நிலைப் பள்ளியில் மாணவர்ளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் விழா..!

தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் உள்ள வீரமாமுனிவர் ஆர்.சி. மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 226 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகி போஸ்கோ குணசீலன் தலைமை தாங்கினார்.

மேலும், நகர்மன்றத் தலைவர் சாதீர், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெஸ்லி அபிஷேக ரத்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பள்ளி மாணவர்கள் 226 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றி பேசினார். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!