தமிழகத்தில் பெண்களுக்கான இலவசம் பேருந்துகள் இயக்கம்!!

தமிழகத்தில் பெண்களுக்கான பேருந்துகள் இயக்கம்: 

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நகர பேருந்துகளில் பெண்களுக்கான இலவச கட்டணம் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இலவச பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் பிங்க் நிறமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

சில பெண்கள் பேருந்துகள் தெரியாமல் ஏறி நடத்துனரிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பேருந்துகளும் ஒரே நிறத்தில் இயங்குவதால் இலவச கட்டண பேருந்துகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் இது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேருந்துகளின் நிறம் மாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு, பெண்கள் இலவச பயணம் செய்யும் பேருந்துகள் பிங்க் நிறத்தில் இயங்கும் என தெரிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக நெல்லை மாவட்டத்தில் இயக்கப்படும் 30 பேருந்துகள் பிங்க் நிறமாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.