பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி: முதல்வர் அறிவிப்பு!

பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுவையில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக ரங்கசாமி அவர்கள் பொறுப்பேற்றார் என்பதும் அதன் பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் முதல்வர் ரங்கசாமி அவர்கள் புதுவையில் பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றும் பள்ளி திறந்தவுடன் மதிய உணவு அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்ற முதல்வரின் இந்த அறிவிப்பு புதுவை மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!