அரசு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வர்க்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்!

அரசுப் பணி தேர்வுகளில் பங்கு பெற பலர் ஆர்வம் காட்டி வரும் நிலையில் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இலவச பயிற்சி வகுப்பு:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற பயிற்சி வகுப்புகளின் மூலம் 2019, 2020 மற்றும் 2021 ஆண்டில் 71 நபர்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு துறைகளில் நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேர்விற்கான பாடக்குறிப்பு இலவசமாக வழங்கப்படுவதோடு வார இறுதி நாட்களில் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது எஸ்எஸ்சி பேஸ் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கடந்த 26ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் விவரத்தை 04286 – 222260 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தை பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பொ.மா ஷீலா கூறியுள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!