தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு ரத்து! ஏன் தெரியுமா?

தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக ஞாயிற்று கிழமைகளில்  மட்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிக அதிகமாக உள்ளதால், மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் படுகிறது.  மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

அதனால், நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று மற்றும் நாளை காலை 6 முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்படும்.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ளலாம் எனவும் இதில் குறிப்பிட்டுள்ளார்.