மீண்டும் தமிழகத்தில் ஜூன் 7 தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!!

தமிழகத்தில் ஜூன் 7 தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால்  இதனை தடுக்கும் நோக்கில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இது மேலும் எவ்வித தளர்வுகளும் இன்றி மே 24 முதல் மே 31 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த காலத்தில் எவ்வித கடைகளும் (மருந்தகங்கள் தவிர) திறக்க தடை விதிக்கப்பட்டது.

தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு உத்தரவு ஜூன் 7ம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்து உள்ளார். மேலும் ஆன்லைன், தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர்கள் கோரும் பொருட்களை வீட்டிற்கே நேரடியாக சென்று காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.