இரவு நேர முழு ஊரடங்கு! முழு தகவல் உள்ளே!

கொரோனா பரவல் காரணமாக ஹரியானாவில் 9 மாவட்டத்தில் இரவு நேர முழு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது.   அரசுகள் நோய் பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி வருகிறது. மக்களுக்கு கொரோனா வைரஸின் தீவிரத்தை உணர்த்த விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. ஊரடங்குகளை அறிவித்து தொற்றை கட்டுப்படுத்த முயல்கிறது.

இரவு நேர ஊரடங்கு நீடிப்பு:

பல மாநிலங்களும் தங்களுக்கேற்ப கட்டுப்பாடுகளை குறைத்தும் அதிகரித்தும் வருகின்றன. இதை தொடர்ந்து தற்போது கொரோனா இரண்டாம் பரவல் அதிகரிப்பதால் ஹரியானா மாநிலத்தில் 9 மாவட்டங்களுக்கு இரவு நேர பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது.

பாதிப்பு அதிகமான உள்ள மாவட்டம்:
  • பஞ்ச்குலம்
  • குருகிராம்
  • கர்னல்
  • சிர்சா
  • சோனிபட்
அரசு தெரிவித்த தகவல்:

இரவு 10 மணி முதல் காலை 5  மணி வரை இரவு முடக்கம் அமலில் இருக்கும் எனவும் மே  3 ம்  தேதி வரை நீடிக்கும் எனவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  மேலும் வழக்கம் போல அப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களுக்கு  தடை இருக்காது எனவும் மருந்து கடைகள் இயங்கும் எனவும் ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!