தமிழகத்தில் மே 24க்கு பிறகும் முழு ஊரடங்கு நீடிக்குமா?மருத்துவர்களின் கருத்து!!

தமிழகத்தில் கொரோனா இராண்டாம் அலையின் தாக்கம் மிகவும் கடுமையானா பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்.தமிழக அரசு 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தியது. ஆனால் மேலும் ஊரடங்கை மே 24ம் தேதிக்கு பிறகு நீடிப்பது தான் சிறந்தது என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கு அதிகமாக பதிவாகியுள்ளது. மாநில அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதன் மூலமாக கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் ஆனால் கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வருவதால்  ஊரடங்கை மேலும் நீடிக்க பிரதமர் மோடி எப்போது அமல்படுத்துவார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் பிரதமர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் மாநில அரசின் முடிவில் விட்டுவிட்டதாக பல விமர்சனங்கள் வருகின்றன. ICMR தலைவர் 10 சதவிகிதத்திற்கு அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்களுக்கு கட்டாயம் முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 14 நாட்கள் மட்டுமே ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது எந்த அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறி தான் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மே 24 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கை நீடிப்பது மட்டுமே தமிழகத்தில் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த ஒரே வழி என தெரிவித்துள்ளனர்.