தமிழகத்தில் மே 2 ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்! அரசு தகவல்!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி 15 ஆயிரத்திற்கும்  மேற்பட்டவர்கள்  பாதிப்புக்கு உள்ளாகின்றன.  எனவே மே 2 ஆம் தேதி முழு ஊரடங்கு அமுல்படுத்தபடும் என சென்னை உயர் நிதிமன்றத்தில் ஆலோசனை நடந்து கொண்டு வருகிறது.

மக்கள் குழப்பம்:

இதற்கிடையில் வருகிற மே 2 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்  ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு தொடர்பாக அரசு எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பது பொதுமக்களை குழப்பமடைய செய்கின்றன.

எதற்கெல்லாம் அனுமதி  கிடையாது:

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 • இறைச்சி கடைகள்
 • மீன் மார்க்கெட்
 • காய்கறி கடைகள்
 • டாஸ்மாக் மதுக்கடைகள்
 • சினிமா தியேட்டர்கள்
 • சலூன் கடைகள்
 • பார்கள்
  வணிக வளாகங்கள் உள்பட அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி கிடையாது.
 • மத்திய அரசு, மாநில அரசு உத்தரவு படி நடந்தாலும் நோய் பரவல்ளை  கட்டுப்படுத்த முடியவில்லை.ஏற்கனவே முழு ஊரடங்கு குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
எதற்கெல்லாம் அனுமதி:
 • பால் வினியோகம்
 • தினசரி பத்திரிகை வினியோகம்
 • மருத்துவமனைகள்
 • மருத்துவ பரிசோதனைக் கூடங்கள்
 • மருந்தகங்கள்
 • ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் அனைத்து சரக்கு வாகனங்கள்
 • விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள், எரிபொருள் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும், அவர்கள் பயணித்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.