தமிழக தொழிற்சாலைகளுக்கு முழு ஊரடங்கில் தளர்வுகள்! வழிகாட்டு முறைகள் அறிவிப்பு!!

தமிழகத்தில் இன்று முதல் அமல்படுத்தப்பட்டு உள்ள தளர்வில்லா ஊரடங்கு காரணமாக, சில தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தொழிற்சாலை இயக்கம்:

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று (மே 24) முதல் 31 வரை தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் மளிகை கடைகள், காய்கறி கடைகள் போன்றவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தவிர இந்த ஊரடங்கு காலத்தில் பால், செய்தித்தாள் விநியோகத்திற்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர சில முக்கிய தொழிற்சாலைகள் மட்டும் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தொழிற்சாலைகலில் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

வழிகாட்டு முறைகள்:

  • அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல்படலாம்.
  • அந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களை அழைத்து வருவதற்கு வேன்கள், கார்கள் மற்றும் பஸ்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • இந்த வாகனங்களுக்கு இ-பதிவு அவசியம்.
  • மே 25 முதல் எவ்வித பணிகளுக்காகவும் இரு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை.
  • மே 25 முதல் தொழிற்சாலைகளில் இ-பதிவு செய்துள்ள வாகனங்களில் மட்டுமே பணியாளர்களை அழைத்து வர அனுமதி.