பொங்கலை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசு பொருட்கள்!! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு: 

தமிழகத்தில் வரும் 2022ம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம், முந்திரி உள்ளிட்ட 20 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் கீழ்காணும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தொகுப்பில் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும் பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு மொத்தம் 1088 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!