அரசு ITI மாணவர்களுக்கு குட் நியூஸ்!! அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்!!

சிவகங்கை மாவட்டம்:

சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்க கூடிய பயிற்சிகளை புதிதாக துவங்கவுள்ளதாக தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு:

மாநிலம் முழுவதுமுள்ள 90 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து அதற்கு தேவையான அடிப்படை தேவைகளை செய்து தர முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதை தொடர்ந்தே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

தொழிற்பயிற்சி நிலையங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும் புதிதாக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திதரும் பயிற்சிகளை உருவாக்கி கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். எனவே மாணவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!