பென்ஷன் வாங்குபவர்களுக்கு குட் நியூஸ்! மத்திய அரசு அறிவிப்பு!

ஓய்வூதியதாரர்கள்

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் முதிர்வு காலத்தில் உதவும் வகையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஓய்வூதியம் வழங்கப்படுவதற்கு மத்திய அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது. இதையடுத்து சென்ட்ரல் சிவில் சர்விஸஸ் விதிகள் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருத்தப்பட்டது. இந்த விதிகள் கடந்த 2003 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கும், பாதுகாப்பு சேவைகளில் உள்ள சிவில் அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விதிகள் ரயில்வே ஊழியர்கள், அனைத்திந்திய சேவைகளின் உறுப்பினர்கள் ஆகியோருக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் சிவில் சர்வீசஸ் விதிகளின் படி மத்திய அரசின் கீழ் பணியாற்றிய ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட வயது வரம்பை எட்டிய பின் அவர்களுக்கு படிப்படியாக ஓய்வூதியம் அல்லது கருணைக் கொடுப்பனவு அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்கள் 80, 85, 90, 95 மற்றும் 100 வயதுகளை எட்டியவுடன் சூப்பர் சீனியர் சிட்டிசன்களாக மாறி விடுகின்றனர்.

அதனால் இவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் ஓய்வூதியத்துடன் கூடுதலாக ஓய்வூதியம் வழங்கப்படும். அதாவது மத்திய அரசு ஓய்வூதியதாரர் ஒருவர் 80 வயதை எட்டிய பிறகு அடுத்தடுத்த 5 ஆண்டுகளுக்கு ஓய்வூதிய சதவீதம் அதிகரிக்கப்படும். மேலும் இந்த கூடுதல் ஓய்வூதியம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய காலண்டர் மாதத்தின் முதல் நாளிலிருந்து கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படும். உதாரணமாக ஒரு மத்திய அரசு ஓய்வூதியதாரர் 1945ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி பிறந்தால் அவருக்கு கூடுதலான ஓய்வூதியம் அக்டோபர் முதல் நாளில் இருந்து வழங்கப்படும்.

மேலும் சென்ட்ரல் சிவில் சர்விஸஸ் விதிகளின் படி,

  • மத்திய அரசு ஓய்வூதியதாரரின் வயது 80 முதல் 85 வரை இருந்தால் அவர்களுக்கு அடிப்படை ஓய்வூதியம் அல்லது கருணை கொடுப்பனவில் 20% அதிகரித்து வழங்கப்படும்.
  • மத்திய அரசு ஓய்வூதியதாரர் ஒருவர் 85 வயது முதல் 90 வயது வரை உள்ளவர்களுக்கு அடிப்படை ஓய்வூதியம் அல்லது கருணை கொடுப்பனவில் 30% அதிகரிக்கப்படும்
  • மத்திய அரசு ஓய்வூதியதாரர் ஒருவர் 90 வயது முதல் 95 வயது வரை இருப்பவர்களுக்கு அவர்களின் அடிப்படை ஓய்வூதியம் அல்லது கருணை கொடுப்பனவில் 40% அதிகரிக்கப்படும்
  • மத்திய அரசு ஓய்வூதியதாரர் ஒருவர் 95 வயது முதல் 100 வயது வரை உள்ளவர்களுக்கு அடிப்படை ஓய்வூதியம் அல்லது கருணை கொடுப்பனவில் 50% அதிகரிக்கப்படும்
  • மத்திய அரசு ஓய்வூதியதாரர் ஒருவர் 100 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை ஓய்வூதியம் அல்லது கருணை கொடுப்பனவில் 100% அதிகரிக்கப்படும்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!