ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!! உடனே பாருங்க!!

தமிழகம் முழுவதும், ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் முதியோர்களின் கைரேகை பதிவாகவில்லை என்றாலும், பழைய முறைப்படி ரேஷன் பொருட்களை விநியோகிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. விரல் ரேகை பதிவாகவில்லை என்றால் பதிவேடுகளில் பதிவு செய்து பழைய முறைப்படி பொருட்களை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும், இலவச அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை போன்ற பொருட்கள் வாங்க ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், ஸ்மார்ட் கார்டில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பொருட்களை வாங்க முடியும்.

தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இது, அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பொருந்தும் என, தகவல் வெளியாகி உள்ளது. ரேஷன் கடைகளில் பழைய முறைப்படி பொருட்கள் வழங்கப்படுவதால் முதியோர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!