ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!! தமிழக அரசு வெளியீடு!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரகளுக்கு 2022ம் ஆண்டிற்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கார்டுக்கும் 20 வகையான பொருட்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

பரிசுத்தொகுப்பு:

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வெள்ளம், பச்சரிசி, திராட்சை,முந்திரி இலவச வேட்டி, சேலை, கரும்பு போன்ற பொருட்கள் வழங்கப்படும். மேலும் ரொக்க பணமும் வழங்கப்படும்.

இந்த வருடம் ரொக்கப்பணம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த வருடம் பொங்கல் பரிசுத்தொகுபில் 100 மிலி ஆவின் நெய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பொங்கல் பண்டிகை தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுகீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 505 ரூபாய் மதிப்புள்ள 20 வகையான பொருட்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!