மகிழ்ச்சியான செய்தி! நாளை முதல் 3 நாட்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி!

மத்திய அரசு அறிவிப்பு:

நாளை வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி முன்னீட்டு இந்தியா முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பல மாநிலங்களில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை.

விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாட வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஸ்டாலின் தெரிவிப்பு:

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கிடையாது. வீடுகளிலேயே கொண்டாடலாம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கி வருகிறது.

பாண்டிச்சேரி, கர்நாடகா மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு:

கர்நாடக அரசு 5 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழாக்களை நடத்த அனுமதி அளித்துள்ளது.

பெங்களூருவில் பொது இடங்களில் மூன்று நாட்கள் மட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை நடத்த மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
பெங்களூரு நகரில் மூன்று நாட்களுக்கு மேல் விநாயகர் திருவிழா கொண்டாட அனுமதிக்கப்படாது.

மாநகராட்சி ஆணையர் தெரிவிப்பு:

விநாயகர் சிலையை கொண்டு வரும்போது அல்லது மூழ்கசெய்யும் எந்த ஊர்வலமும் நடத்தக்கூடாது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிளாஸ்டர் ஆஃப் பாரிசால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கும் தடை செய்யப்பட்டுள்ளன. வீடுகளில் நிறுவப்பட்ட சிலைகள் வீட்டில் அல்லது நம் மொபைல் டேங்கில் மூழ்கடிக்க வேண்டும்.பொது இடங்களில் நிறுவப்படும் விநாயகர்கள் நான்கு அடி உயரத்தில் இருக்க வேண்டும். அவற்றையும் நமது மொபைல் டேங்குகளில் மூழ்கடிக்க வேண்டும். ஏரிகளில் சிலைகளை மூழ்கடிப்பதை தடை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!