தமிழகம் முழுவதும் அரசு ஏசி பேருந்துகள் நாளை முதல் இயக்கம்!!

தமிழகம் முழுவதும் நாளை (அக்டோபர் 1) முதல் குளிர்சாதன பேருந்துகளை இயக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் நாளை முதல் மீண்டுமாக 702 அரசு குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதாவது கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான அரசு பேருந்து சேவைகள் முறையான கொரோனா வழிகாட்டுதல்களுடன் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும். அனைத்துப்பயணிகளும் சானிடைசர் மூலம்கைகளைச் சுத்தம் செய்த பிறகுதான் பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல், ஏசி பேருந்துகளில் தினமும் கிருமிநாசினி தெளித்து இயக்க சம்பந்தப்பட்ட அனைத்துஅதிகாரிகளுக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!