சென்னையில் புதிதாக விமான நிலையம் தொடங்க அரசு முடிவு!

சென்னை விமான நிலையம்:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதனால் சென்னையில் புதிதாக விமான நிலையம் ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதில் குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி நாட்டில் டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு பிறகு நாட்டின் 5வது பரபரப்பான விமான நிலையமாக சென்னை விமான நிலையம் மாறியுள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் மே மற்றும் ஜூன் மாதங்களில் 3.45 லட்சம் மற்றும் 3.88 லட்சம் பயணிகள் எண்ணிக்கை இருந்த நிலையில் கடந்த ஜூலையில் மட்டும் 4.29 லட்சமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டில் சென்னை விமான நிலையம் நாட்டிலே 3வது பரபரப்பான விமான நிலையமாக இருந்த நிலையில் தற்போது (2022) நாட்டிலே 5வது பிஸியான விமான நிலையமாக மாறியுள்ளது. ஆனால் உள்நாட்டுப் பயணிகள் போக்குவரத்தை ஒப்பிடும் போது மற்ற மெட்ரோ நகரங்களை விட சென்னை விமான நிலையம் பின்தங்கிய நிலையில் உள்ளது.

அதனால் இதனை அதிகரிக்கும் விதமாக உள்நாட்டு விமான போக்குவரத்தில் ஆகாசா ஏர் நிறுவனமானது சென்னையில் இருந்து பெங்களூர், மும்பை மற்றும் கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு அடுத்த மாதத்தில் இருந்து விமான சேவையை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!