ஆசியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை!!

மத்திய, மாநில அரசு தெரிவிப்பு:

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையாக  கடுமையாக தாக்கி வருகிறது. தினசரி பாதிப்பு எதிர்பாராத அளவு புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை பணிகளை செய்து வருகின்றன.

ஆசிரியர்களுக்கு விடுமுறை:

பள்ளி  மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதால் கோடை வெயிலின் தாக்கம் மற்றும் கொரோனா பரவல் நிலையை கருத்திற்கொண்டு ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.  15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் ஓவியம், இசை, நடனம், தையல் போன்ற கலை பாடங்களை கற்று தருகின்றன.

ஆசிரியருக்கு மாத ஊதியம்:

ஆசிரியருக்கு மாதம் ரூ.10,000 ஊதியமாக வழங்கப்படும். கொரோனா காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் இல்லாததால் அலுவலக பணிகளில் பகுதி நேர ஆசிரியர்களை ஈடுபடுத்தி கொண்டு சம்பளம் வழங்கினர்.

அரசு கோரிக்கை:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்கு மே மாத கோடை விடுமுறைக்கான ஊதியம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!