அரசு ITI நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு!!

அரசு ITI நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வருகின்ற 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2021 -ஆம் ஆண்டிற்கு கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளான Desk Top Publishing Operator, Plastic Processing operator , food production general , Front office Assistent , physiotherapy , techician , smartphone technician cum app tester ஆகிய தொழில் பிரிவுகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொழிற்பயிற்சியில் சேர வாய்ப்பு தரும் விதமாக நேரடி சேர்க்கை 30.10.2021 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்கள் அறிய இத்தொழிற் பயிற்சி நிலைய தொலைபேசி எண்களை 044-29813781, 9499055649 தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவா முனைவர்.ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!