தமிழக அரசு அறிவிப்பு:
மாற்றுத்திறனாளிகள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விதிமுறைகளை தற்போது தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுக்கான விதிமுறைகள்:
விதிமுறைகள் வெளியீடு அவை பின்வருமாறு :
* அனைத்து வகையான தேர்வுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தேர்வு எழுதும் நபர் / வாசிக்கும் நபர் / ஆய்வக உதவியாளர் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும்.
*மாற்றுத்திறனாளிகளின் விருப்பத்தின் பேரில் உதவியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
*தேர்வு எழுதும் ஒருவரை உதவியாளராக நியமிக்கும் போது, அவர் வேகமாக தேர்வு எழுதுபவராக இருத்தல் வேண்டும்.
*மாநில, மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளின் தேர்வுக்கு உதவிடும் வகையில், எழுதுபவர், வாசிப்பவர், ஆய்வக உதவியாளர் அடங்கிய ஒரு கமிட்டியை ஏற்படுத்த வேண்டும்.
*கணினி வழித் தேர்வை எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒரு நாள் முன்பே அதை சரிபார்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
*தனி அறையில் நடத்தப்படும் தேர்வுகளில் கால்குலேட்டர், பிரய்லி உபகரணங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
*வெவ்வேறு மொழிகளில் தேர்வு எழுதினால், ஒன்றுக்கு மேற்பட்ட உதவியாளரை பணியமர்த்திக்கொள்ளலாம்.
*தேர்வில் மாற்றுத்திறனாளிகள் விரும்பினால் அவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட வேண்டும்.
*கமிட்டியில் இருந்து யாரேனும் ஒருவரை சம்மந்தப்பட்ட மாற்றுத்திறனாளி தேர்வரே தேர்வு செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
இந்த புதிய தேர்வு விதிமுறைகள் அனைத்தும் தேர்வுகள் நடைபெறும் போது கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!