அரசு இசை கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!!

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மாணவர் சேர்க்கை:

ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

எழுத படிக்க தெரிந்தவர்கள் தவில், நாதசுரம் ஆகிய கலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். மூன்று ஆண்டுகள் நடைபெறும் இந்த படிப்பில் அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ. 400 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு ஆர்வம் உள்ள மாணவா், மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து மேலும் விவரங்களை அறிய தலைமையாசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, டி. சவேரியார்புரம், சிலுவைப்பட்டி (அஞ்சல்) தூத்துக்குடி-2 என்ற முகவரியில் நேரில் செல்லலாம் அல்லது 9487739296 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!