தமிழ்நாடு அரசு!! 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!!

பணியிட மாற்றம்:

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர்கள் முதல் காவல்துறையினர் வரை பல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு உத்தரவு:

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது.

  1. ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாகப் பதவி வகித்துவரும் தேஷ்முக் ஷேகர் சஞ்சய் மாற்றப்பட்டு, தமிழ்நாடு சிறப்புப் படை – பட்டாலியன் பிரிவு (மதுரை) கமாண்டண்ட்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  2. ரயில்வே (சென்னை) எஸ்.பி.யாகப் பதவி வகித்து வரும் தீபா சத்யன் மாற்றப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  3. தமிழ்நாடு சிறப்புப் படை – பட்டாலியன் பிரிவு (மதுரை) கமாண்டண்ட்டாகப் பதவி வகித்துவரும் இளங்கோ மாற்றப்பட்டு, ரயில்வே (சென்னை) எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  4. கடலோரப் பாதுகாப்புக் குழு (ராமநாதபுரம்) எஸ்.பி.யாகப் பதவி வகித்துவரும் ஜெயந்தி மாற்றப்பட்டு, செயலாக்கப் பிரிவு (சேலம் மண்டலம்) எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  5. செயலாக்கப்பிரிவு (சேலம் மண்டலம்) எஸ்.பி.யாகப் பதவி வகித்துவரும் மகேஷ்குமார் மாற்றப்பட்டு, நில ஆக்கிரமிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  6. பொருளாதாரக் குற்றப்பிரிவு – 2 (நிதி நிறுவனங்கள்) (சென்னை) ஐஜியாகப் பதவி வகித்துவரும் கல்பனா நாயக் மாற்றப்பட்டு, ரயில்வே (சென்னை) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  7. கல்வி விடுப்பில் இருந்த அபின் தினேஷ் மோதக், பொருளாதார குற்றப்பிரிவு (சென்னை) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்”.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!