TNPSC தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி!!

தமிழக அரசு:

தமிழகத்தில் அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு முயற்சி செய்து படித்து வரும் இளைஞர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பினை தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்பயிற்சி பல்வேறு விதமான அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த பேராசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. இந்த தன்னார்வ பயிலும் வட்டமானது பல்வேறு மாவட்டங்களில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சியின் போது பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதோடு வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள 3,261 மத்திய அரசு காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் தங்களது பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரி போன்ற தகவல்கள் அடங்கிய சுயவிபரத்தை நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு நெறிமுறை மையத்தில் நேரிலோ அல்லது 04286-222260 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தெரிவிக்கலாம்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!