அங்கன்வாடி மையங்கான தமிழக அரசு அறிவிப்பு:
அங்கன்வாடி மையங்கள் வரும் செப்டம்பர் 1அம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
வழிகாட்டு நெறிமுறைகளுக்கான முக்கிய குறிப்புக்கள்:
* தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் வரும் 1 ஆம் தேதி முதல் சூடான மதிய உணவு வழங்க வேண்டும்.
* அங்கன்வாடி ஊழியர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
* அங்கன்வாடி ஊழியர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும்.
*வளாகங்கள், சமையலறை உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்திய பின் பயன்படுத்த வேண்டும்.
* அங்கன்வாடி மையங்களுக்கு வரும் 2 முதல் 6 வயது குழந்தைகள் முககவசம் அணிவது கட்டாயமில்லை.
* அங்கன்வாடி ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் மையத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
பயனாளிகள் முட்டைகளை வீட்டிற்கு எடுத்துச்செல்ல அனுமதிக்கக்கூடாது:
* ஊழியர்கள் விரல் நகங்களில் நகப்பூச்சு மற்றும் செயற்கை நகங்களை பயன்படுத்தக்கூடாது.
* மூக்கு சொறிதல், தலை கோதுதல், கண்கள், காது, வாயினை தேய்த்தல், எச்சில் துப்புவதை தவிர்க்க வேண்டும்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!