செப்டம்பர் 1-ம் தேதி கட்டாயமாக பள்ளி, கல்லூரிகள் திறக்க தமிழக அரசு உத்தரவு!!!

அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவிப்பு:

செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளை அனுமதிக்க அரசு உத்தேசித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்கள் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை வாரம் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பள்ளிக்குள் அனுமதிக்கக் கூடாது. பள்ளிக் குழந்தைகளுக்கு வைட்டமின் மாத்திரைகள், நோய் எதிர்ப்பு சக்தி தரும் மாத்திரைகளை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!