தமிழகத்தில் அனைத்து கடைகளும் திறக்க அரசுக்கு கோரிக்கை!!

தமிழகத்தில் அனைத்து கடைகளும் திறக்க அரசுக்கு கோரிக்கை:

கொரோன காரணத்தினால் தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால்  மேலும் ஒரு வார காலம் (ஜூன் 7 வரை) நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், தினசரி காலை 10 மணிவரை அனைத்து கடைகளையும் திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏற்கனவே அமலில் உள்ள முழு ஊரடங்கு உத்தரவு எவ்வித தளர்வுகளும் இன்றி ஜூன் 7ம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தற்போது ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளநிலையில்  தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கில் சிறு, குறு, நடுத்தர, நடைபாதை வியாபாரிகள் காலை 10 மணிவரை கடைகளை திறந்திருக்க அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் ஊரடங்கு முடியும் வரை வியாபாரிகளுக்கு சிறப்பு நிதி, மின்கட்டணம் செலுத்துவதில் இருந்து முழுவதுமாக விலக்கு உள்ளிட்டவை அளிக்க வேண்டும் என கோரப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஒரு ஆண்டுக்கு மேலாக கொரோனா தொற்றினால் வணிகர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.