அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை செப். 5 முதல் துவக்கம்!

அரசு மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்:

அரசுப் பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பு உள்ளிட்ட உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை ஆசிரியர் தினமான செப்.5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்களை மக்களின் நலனுக்காக அறிவித்து அதனை செயல்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக திமுக தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது வரை அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், நிதிநிலை சீரான பிறகு அந்த திட்டமும் நிச்சயம் நிறைவேறும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

மேலும் அவர் அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவிகளுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் துவக்கி வைக்க உள்ளோம்

அவர் மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்த ஸ்மார்ட்கிளாஸ் திட்டத்தை துவக்கி வைத்துவிட்டு அதன் பின் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி பெற மாதம்தோறும் ரூ.1000 திட்த்தை துவக்கி வைப்பார் என தெரிவித்துள்ளார். நான் கலைஞரின் மகன் நிச்சயம் இந்த வாக்குறுதிகளை செய்வேன் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!