அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்! அரசு கண்காணிப்பு!

தமிழக அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவை அளிக்கும் திட்டம் கடந்த வாரம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இதற்கான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

காலை சிற்றுண்டி திட்டம்:

பள்ளிக்கு காலை நேரத்தில் அவசரமாக குழந்தைகள் வருவதால் அவர்கள் உணவை சாப்பிடாமல் வகுப்பை கவனிக்கும் சூழல் இருந்தது. இதனை கவனித்த தமிழக முதல்வர் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ‘முதல்வரின் காலை உணவு’ திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். மேலும், இந்த திட்டத்தை கடந்த செப்டம்பர் 15ம் தேதியான அண்ணாவின் பிறந்த நாளில் மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு செப்டம்பர் 16ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் மூலம் உணவு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய உணவு வகைகளை அரசு முன்னதாகவே பட்டியல் இட்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டியானது 6 சமையல் கூடங்களில் தயாரித்து வினியோகிக்கப்படுகிறது. தற்போது சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அவர்கள் உணவு சரியான நேரத்தில் தயாரிக்கப்பட்டு, முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் சி.எம்.13எப்.எஸ். என்ற செயலியை உருவாக்கியுள்ளார்.

இதன் மூலம் சமையல் தொடங்கும் நேரம், முடியும் நேரம், அங்கிருந்து வாகனத்தில் கொண்டு செல்லும் நேரம், பள்ளியில் வினியோகிக்கும் நேரம், குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நேரம் போன்றவற்றை உன்னிப்பாக கவனிக்க முடியும். மேலும், எங்கு தாமதம் ஏற்படுகிறது என்பதையும் அறிய முடியும். குறிப்பாக, பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!