மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட உதவித்தொகை அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிப்பு!!

மாற்றுத்திறனாளிகள் ஊக்கத்தொகை:

புதுச்சேரியில்  ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை ரூ.500  அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்று ரங்கசாமி கூறினார்.

உபகரணங்கள்:

அதனை தொடர்ந்து 500 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.37 லட்சம் மதிப்புள்ள சக்கர நாற்காலி, 3 சக்கர வாகனம், செல்போன், காது கேட்கும் கருவிகள் போன்ற உபகரணங்களை வழங்கினார் முதல்வர் ரங்கசாமி.

முதல்வர் கூட்டத்தில் தெரிவிப்பு:

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரிசியின் அளவையும் உயர்த்தி தருவதாக நலத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் பத்மாவதி, துணை இயக்குனர் கலாவதி உள்பட பலர் கலந்து கொண்ட கூட்டத்தில் முதல்வர் கூறியுள்ளார்.

மக்களிடையே பெரும் வரவேற்பு:

இதனை தொடர்ந்து வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய விகிதாச்சாரம் வழங்கப்படும் என்று கூறியதோடு மத்திய அரசும் துணை நிற்கும் என முதல்வர் வாக்குறுதி கொடுத்தது மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்