பள்ளிகள் வாரத்திற்கு 6 நாட்கள் இயங்கும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க இன்னும் ஓரிரு நாட்களே இருக்கும் நிலையில்  9, 10, 11, 12ம் வகுப்புகள் திறக்கப்பட உள்ள நிலையில், தமிழக அரசு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகளை  பின்பற்றுமாறு:

* பள்ளிகள் வார நாட்களில் ஞாயிற்று கிழமை தவிர மற்ற 6 நாட்களும் செயல்படும்.

* 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் நடைபெறும்.

* வகுப்புகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும்.

* ஒருவேளை பள்ளிகளில் கூடுதல் வகுப்புகள் இல்லையென்றால், மாற்று நாட்களில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்திக்கொள்ளலாம்.

* பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகஓள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும்.

* பள்ளிக்கு வர விருப்பமில்லா மாணவர்கள் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் வழியிலும் பாடங்களை கற்கலாம்.

* பள்ளி நுழைவு வாயில் மற்றும் வெளியே செல்வதற்கு தனித்தனி வாயில்கள் பின்பற்றப்பட வேண்டும்.

* மாணவர்கள் ஒரு வருக்கொருவர் உணவுகளை பகிர்ந்து உண்ண கூடாது. அதேபோல குழுவாக இடைவேளை நேரங்களில் மாணவர்கள் அமரக்கூடாது.

* மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர வைக்கப்பட வேண்டும்.

* பள்ளி வளாகங்களில் விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் காலை நேர வழிபாட்டு கூட்டங்கள் ஆகியவை நடத்தக்கூடாது.

* பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு வளாகங்கள் வகுப்பறைகளில் உள்ள மேசை நாற்காலி மற்றும் பள்ளி வளாகங்கள் முழுவதுமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்

* அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

* ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

* பள்ளி வளாகங்களில் கைகளை கழுவுவதற்கு உரிய தண்ணீர் வசதி மற்றும் சோப்பு வைத்திருக்க வேண்டும்.

*அனைத்து வகுப்புகளிலும் கிருமி நாசினி பாட்டில்கள் இருப்பு வைக்கப்பட வேண்டும்.

* பள்ளிகளை திறப்பதற்கு முன்னதாக வகுப்பறைகளில் உள்ள மேஜைகள், இருக்கைகள், ஜன்னல்கள், கதவுகள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!