சென்னை பல்கலை செமஸ்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!!

சென்னை பல்கலைக்கழகம்:

சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் மனவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவுள்ளன. அதற்கான ஹால் டிக்கெட் வெளியாகும் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை பல்கலைக்கழக தொலைத்தூரக் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கான நடப்பு பருவத் தேர்வுகள் செப்டம்பர் 27-ம் தேதி முதல் தொடங்கவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், அனைத்து வகை இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளுக்கு, வரும் 27ம் தேதி செமஸ்டர் தேர்வு துவங்க உள்ளது.

ஹால் டிக்கெட்:

தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை www.ideunom.ac.in என்ற பல்கலையின் இணையதளத்தில் இருந்து இன்று  (செப். 20) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!