ரேஷன் கடைகளில் பழைய முறையில் பொருட்கள் விநியோகம்!!

ரேஷன் கடை:

பொது மக்களின் சிரமங்களை குறைப்பதற்காக உயரதிகாரி உத்தரவுப்படி, நேற்று முதல் பழைய முறைப்படி பொருட்கள் விநியோகம் வழங்கப்படுகிறது. பயோமெட்ரிக் முறையில் வழங்குவதால் பொதுமக்களுக்கு மட்டுமன்றி ஊழியர்களுக்கும் பல்வேறு இடர்ப்பாடுகள் ஏற்படுகிறது.

இதன்படி, விருதுநகர் மாவட்டம் முழுவதும் நேற்று முதல் பழைய நடைமுறைப்படி பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வயதானவர்களின் கைரேகை பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவாகவில்லை. இதனை சரி செய்ய கோரி பொது மக்களும் ரேஷன் கடை ஊழியர்களும் கோரிக்கை விடுத்தனர். வயதானவர்களுக்கு கை விரல் ரேகைகளில் தேய்வு மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவதால் அவர்களின் கைரேகை பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவாகவில்லை .

இந்த நிலையை சரி செய்ய, பழைய முறைப்படி ஏடுகளில் பதிவு செய்து அதன் பிறகு பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் குறிப்பாக முதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி கைரேகை பதிவாகாதவர்களுக்கு ரேகை இன்றி பதிவு செய்யப்பட்ட பிறகு பொருட்கள் வழங்கப்படும் என்று தேனி மாவட்ட ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!