தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! உடனே பாருங்க!!

தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களை தரமானதாக வழங்க முன்னரே அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இது தொடர்பான ஆய்வினை நடத்தி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளார்.

தரமான பொருட்கள்:

இந்த ஆய்விற்கு பிறகு அமைச்சர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான மற்றும் சரியான எடையில் பொருட்களை வழங்க வேண்டும்.

அப்படி தரம் குறைந்த அரசி மக்களுக்கு வழங்கப்பட்டால் அதனை ரேஷன் கடைகளுக்கு அனுப்பிய முதுநிலை மண்டல மேலாளர், தரக் கட்டுப்பாட்டு மேலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளிடம் பொருட்களை உடனடியாக பெற்று அவற்றை முறையாக பராமரித்து மக்களுக்கு வழங்க வேண்டும்.

எனவே பொருட்களின் தரத்தை கவனமாக கண்காணிக்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு அரிசி வழங்கும் ஆலைகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக அரிசி மூடைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதன் பிறகு, திருவல்லிக்கேணி ஜாம்பஜாரில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் அங்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தி, மக்களுக்கு தரமான பொருட்களை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!