தமிழகத்தில் நவம்பர் 10, 11 தேதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்திற்கு நவம்பர் 10-ஆம் தேதி மட்டும் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது வடகிழக்கு பருவமழையானது சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடைவெளி இல்லாது விடிய விடிய கொட்டித் தீர்க்கிறது.

நாளை வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் நாளை மறுநாள் நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் அறிவிப்பு

நாளை உருவாகும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வருகிற 11-ஆம் தேதி அதிகாலை வட தமிழக கடற்கரையை நெருங்கும்.

இதனால் தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் நவம்பர் 10 ,11ம் தேதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்புளளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  இதனையடுத்து தமிழ்நாட்டுக்கு அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.