1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு  விடுமுறையா? புதிய வைரஸ் எதிரொலி!!!

புதிய வைரஸ் எதிரொலியால் 1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு  விடுமுறையா?

இன்ஃப்ளூயன்சா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் மத்திய அரசு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. புதிய வைரஸ் பரவலை காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நாளை மார்ச் 16 முதல் மார்ச் 26ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

புதுவை அரசு புதிய வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிப்படைவதால் பல்வேறு தரப்பினர் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் புதுவை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பள்ளி மாணவர்களின் நலன் கருதி நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வைரஸ் குழந்தைகளின் சுவாசம் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு காய்ச்சல் அதிகம் பரவுவதால் இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன்படி புதுவையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் 26 ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Scroll to Top