தமிழகத்தில் நாளை 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்:

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்க கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. கனமழை அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் என்றும் வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து சென்னை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் தீவிரத்தை பொறுத்த மற்ற மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!