21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அரசு அறிவிப்பு!!

பள்ளிகளுக்கு விடுமுறை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று (நவ.26)21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி சிவகங்கை, மதுரை, திருச்சி, திருவாரூர், ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய 6 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை காலங்களில் மக்கள் பாதுகாப்புடன் இருப்பது குறித்தும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அறிக்கை வெளியிடப்படுகிறது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!