நாளை பள்ளி கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை! உடனே பாருங்க!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது

நீலகிரி மாவட்டத்தில் நாளை அதாவது டிசம்பர் 22ஆம் தேதி ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்றும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே கன மழை மற்றும் வெள்ளம் காரணமாகவும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல நாட்கள் விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு விடுமுறை நாள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 8 ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!