பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறையா? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைகளை முன்னிட்டு வரும் டிச.25ம் தேதி முதல் ஜன.2ம் தேதி வரை 9 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

9 நாட்கள் பள்ளிகள் விடுமுறை:

இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்பதன் அடிப்படையில் பாடங்களை விரைவில் நடத்தி முடிக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதம் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறும். பின்னர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் கொண்டாடும் விதமாகவும், அரையாண்டு விடுமுறையாகவும் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்படவில்லை. ஆனால் இன்னும் சில தினங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட்ட உள்ளது. எனவே இந்த பண்டிகை நாட்களை முன்னிட்டு வரும் டிச.25ம் தேதி முதல் ஜன.2ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின் ஜன.3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!