தமிழகத்தில் கர்ப்பிணி பெண்காவலர்களுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்காவலர்களுக்கு விடுமுறை: எஸ்பி அறிவிப்பு!!

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் கர்ப்பிணி பெண் காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை அளித்து மாவட்ட காவல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணத்தினால் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறப்பு விடுமுறை

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் கர்ப்பிணி காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது கொரோனாவில் இருந்து கர்ப்பிணி காவலர்களை பாதுகாக்க அவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரையிலும் சிறப்பு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.